ETV Bharat / state

மகள்கள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்! - Mother rescued two daughters in chennai

சென்னையில் தண்டவாளத்தில் ரயில் வருவதை அறியாமல் கடக்க முயன்ற தனது இரு மகள்களை காப்பாற்றச் சென்ற தாய், மகள்களை காப்பாற்றிவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள்கள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய்

author img

By

Published : Aug 7, 2023, 7:55 AM IST

Updated : Aug 7, 2023, 3:51 PM IST

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பழைய கட்டத் தொட்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா மற்றும் ஏழுமலை தம்பதியினர். இவர்களுக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் பார்மசி சார்ந்த பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். சித்ரா மெடிக்கல் ஒன்றில் கணக்காளராகவும், அவரது கணவர் ஏழுமலை ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் இரண்டு மகளும் பார்மசி சார்ந்த பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் தனது இரண்டு மகள்களுக்கும் புதிய ஆடைகள் எடுப்பதற்காக சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் பகுதிக்குச் சென்று உள்ளனர். ஆடைகள் எடுத்துவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது வீட்டுக்கு செல்வதற்காக மூவரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்து, பின் வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்கு அடுத்த பிளாட்ஃபார்ம் நோக்கி சென்று உள்ளனர்.

சரியாக 5.30 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. தண்டவாளத்தில் ரயில் வருவதனைக் கவனிக்காமல் மகள்கள் சென்றதை சித்ரா கவனித்து பதறிபோயுள்ளார். தனது உயிரை பற்றி சற்றும் கவலைக்கொள்ளாமல் தண்டவாளத்தில் ஓடிச் சென்று அவரது இரு மகள்களையும் தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு உள்ளார் தாய் சித்ரா.

இதில் மகள்கள் இருவரும் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து விழுந்து உள்ளனர். இரண்டு மகள்களும் ரயிலில் அடிபடாமல் நூலிழையில் தப்பித்த நிலையில் தாய் சித்ரா ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு உடற் கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது இரண்டு மகள்களின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தாய் ஒருவர் தியாகம் செய்திருக்கும் சம்பவமானது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாக சென்னையில் ரயில் தண்டவாளங்களில் அதிகளவில் விபத்து நடைபெற்று வருவதனால் இதனை தடுக்க ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக சென்னை கிண்டி பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கமாக பராமரிப்பு பிரிவை சார்ந்தவர்கள் தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர் இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் தாம்பரத்தை நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பணிக்கு பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில் சேவையும் பாதிப்படைந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சென்னை புறநகர் மின்சார ரயில் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஊழியர்கள் முன்கூட்டியே கண்காணித்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரத்திற்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: ‘ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருவதற்கு சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்’ - டி.ஆர்.பாலு!

Last Updated : Aug 7, 2023, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.