ETV Bharat / state

தாயும் மகளும் நடத்திய போலி நிறுவனம் - வழியனுப்ப சென்றபோது அதிரடியாக கைது - சென்னை விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டில் வேலை தருவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக்கொண்டு வெளிநாடு தப்பி செல்ல முயன்ற தாய், மகள் ஆகியோர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தாயும் மகளும் நடத்திய போலி நிறுவனம் - வழியனுப்ப சென்றபோது அதிரடியாக கைது

author img

By

Published : May 11, 2022, 11:52 AM IST

சென்னை வேளச்சேரி பாரதி நகர் பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதேநேரம் வெளிநாடு சென்று வேலை செய்யலாம் என எண்ணிய தன்ஷிகா, தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள (Assyst Career Generating Pvt Ltd) என்ற நிறுவனத்தை நேரில் அணுகியுள்ளார். அங்கு கிளீனா கிரியேட்டர்(29), மற்றும் அவரது தாய் அனிதா கிரியேட்டர்(59) ஆகியோர் தன்ஷிகாவிடம் நல்ல விதமாக பேசி 25 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.

மோசடி: மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் முதல் கரோனாவை காரணம் காட்டி வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாக தன்ஷிகா நெருக்கடி கொடுத்ததால் சிறிது சிறிதாக 11 லட்சம் ரூபாய் வரை திரும்ப கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் தாய்,மகள் ஆகிய இருவருமே செல்போன் எண்ணை அணைத்துள்ளனர். மேலும் அலுவலகத்தையும் மூடி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

வழியனுப்ப வந்த போது கைது : இதனால் அதிர்ச்சியடைந்த தன்ஷிகா கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரிக்காமல் அதனை கிடப்பில் போட்டனர். பின்னர் தன்ஷிகா அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் அணுகி புகார் அளித்தார்.

பின்னர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இவ்வாறு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில் நேற்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போது, அவர்களை பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் கிளீனா அமெரிக்கா செல்ல இருந்ததாகவும், அவரது தாய் கிளீனாவை வழியனுப்ப சென்றிருந்ததும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ’அயன்’ பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.