ETV Bharat / state

Pongal Special Bus: பொங்கல் பண்டிகை சிறப்புப்பேருந்துகளுக்கு 1,33,659 பேர் முன்பதிவு

தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 659 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatபொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் 1,33,659 பேர்  முன்பதிவு

author img

By

Published : Jan 9, 2023, 3:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் 1,33,659 பொதுமக்கள் முன்பதிவு செய்துள்ளார்கள் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜன.11ஆம் தேதி முதல் ஜன.20ஆம் தேதி வரையிலான நாட்களுக்கு மொத்தம் 1,33,659 பொதுமக்கள் முன்பதிவு செய்துள்ளார்கள். சென்னையில் இருந்து 60,799 நபர்களும், பிற ஊர்களிலிருந்தும் 72,860 நபர்களும் முன்பதிவு செய்துள்ளார்கள்.

பொதுமக்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்திட, அரசுப் பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:முதல்வர் ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி எம்ஆர்பி செவிலியர்கள் நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.