ETV Bharat / state

அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை - எச்சரித்த ராதாகிருஷ்ணன்

டெங்கு காய்ச்சலால் தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; அடுத்த மூன்று மாதங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்
author img

By

Published : Oct 10, 2021, 5:37 PM IST

சென்னை: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (அக்.10) ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 32 ஆயிரத்து 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரசு மூலம் 4.78 கோடி டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

46.08 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மதியம் வரவுள்ளன.

கரோனா இன்னும் ஒழியவில்லை

கரோனா தொற்று இன்னும் ஒழியவில்லை, கரோனா தொற்றைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் - அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 4% பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களும் வேறு இணை நோய்களினால் உயிரிழந்தனர். மேற்கு மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்துள்ளது.

அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை

அடுத்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். தங்களது இல்லங்களைச் சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

குழந்தைகளைப் பாதிக்கும் அரிய வகை நோய் குறித்து ஆய்வு செய்ய எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்களில் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை தடுப்பூசி செலுத்தப்படாது

மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால் நாளை (அக்.11) தடுப்பூசி மையங்கள் செயல்படாது. சுகாதாரப் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது.

சில இடங்களில் விடுமுறை வழங்கவில்லை எனப் புகார் வருகிறது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் - தனி கமிட்டி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.