கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு இதுவரை, 23 கோடிக்கும் அதிகமான (23,35,86,960) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
இன்று (ஜூன்.02) காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் மொத்தம் 21 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 22 டோஸ் தடுப்பூசிகள் (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில், சுமார் 1.64 கோடி (1,64,42,938) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.