இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அதற்கு காரணம் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகிறது. இதுவரை இந்தியாவில் 1290 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 897 அரசுத் துறை ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் உள்ளன.
குறிப்பாக:
- ஆர்டி பிசிஆர்(RT PCR) பரிசோதனை ஆய்வகங்கள்: 653 (அரசு: 399 + தனியார்: 254)
- ட்ரூ நாட்(TrueNat) பரிசோதனை ஆய்வகங்கள்: 530 (அரசு: 466 + தனியார்: 64)
- சிபிஎன்ஏஏடி(CBNAAT) பரிசோதனை ஆய்வகங்கள் : 107 (அரசு: 32 + தனியார் 75)
இதையும் படிங்க: கரோனா தாக்கம் கட்டுக்குள் உள்ளது: ஹர்ஷ் வர்தன்