ETV Bharat / state

சென்னை:  இரண்டு லாட்ஜ்களில் பணம் திருட்டு - chennai news in tamil

சென்னை பெரியமேடு பகுதிகளில் அடுத்தடுத்த இரண்டு லாட்ஜ்களில் பணம் திருடப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

money-theft-in-two-consecutive-lodges-in-chennai
சென்னை: அடுத்தடுத்த இரு லாட்ஜ்களில் பணம் திருட்டு
author img

By

Published : Jul 9, 2021, 2:31 PM IST

சென்னை: பெரியமேடு சைடாம்ஸ் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலையில் மராபா லாட்ஜ் மற்றும் ராயல் ஸ்டார் லாட்ஜ் அமைந்துள்ளன. இந்த லாட்ஜ்களில் வரவேற்பறையின் கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் 29 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த லாட்ஜ் உரிமையாளரான சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில் ஒரே நபர் இரண்டு லாட்ஜ்களிலும் உள்ள கல்லா பெட்டியை ஸ்க்ரூ ட்ரைவர் மூலமாக திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து இரு உரிமையாளர்களும் பெரியமேடு காவல் நிலையத்தில் திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: படகில் கள்ளச்சாராயம்: பறிமுதல் செய்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.