இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பொது விநியோகத்தின் கீழ் வழங்கப்படும், அரிசிக்கு பதிலாக அவரவர் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்ற இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்னிலையில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது குடியரசு தலைவர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரிசியை ஒப்பந்ததாரர்கள் மூலமாக பெற்று அதை கிடங்கில் வைத்து மக்களுக்கு வழங்குவதன் மூலமாக ஏற்படும் விரையங்கள் தவிர்க்கப்படும். மேலும், மக்கள் தங்களுக்கு தேவையான அரிசியை, தேவையான நேரத்தில், தேவையான அளவு தரமாக தாமே பெற்றுக் கொள்ள முடியும். எனவே, குடியரசு தலைவர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
இதையும் படிங்க : திமுக நகர செயலாளர் மீது மனைவி புகார்