இரண்டாவது முறையாக பாஜக அமைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தமிழ்நாடு வர இருக்கிறார். 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வரும் அவர், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை வர உள்ள பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் பலத்த பதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், செப்டம்பர் 24ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.