ETV Bharat / state

ரூ. 31,530 கோடி மதிப்புள்ள செயல் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி! - மோடி உரை

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 கட்டமைப்பு செயல் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

திட்டங்களை தொடங்கி வைத்த மோடி
திட்டங்களை தொடங்கி வைத்த மோடி
author img

By

Published : May 26, 2022, 9:24 PM IST

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டரங்கித்திற்கு வந்தார்.

தனி விமானத்தில் வந்த மோடி
தனி விமானத்தில் வந்த மோடி

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டப் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, பல்வேறு கட்டமைப்பு செயல் திட்டங்களை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ., தூரத்துக்கு 598 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 3ஆவது ரயில் பாதையைத்திறந்து வைத்தார். இதேபோல், மதுரை - தேனி இடையே 506 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையையும் திறந்து வைத்தார்.

திட்டங்களை தொடங்கி வைத்த மோடி
திட்டங்களை தொடங்கி வைத்த மோடி

எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு 849 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பெங்களூரு - திருவள்ளூர் பிரிவில் 271 கி.மீ., தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் 911 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயல் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கலங்கரை விளக்கம் செயல்திட்டத்தின்கீழ், 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 152 வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஒப்படைத்தார். இதுதவிர, 5ஆயிரத்து 852 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம், 14ஆயிரத்து 872 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களை தொடங்கி வைத்த மோடி
திட்டங்களை தொடங்கி வைத்த மோடி

நெரலூரு - தர்மபுரி இடையே 3ஆயிரத்து 871 ரூபாய் கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைத்தல், சென்னையில் ஆயிரத்து 428 கோடி ரூபாயில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் உரை

மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கி.மீ., தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் 724 கோடி ரூபாய் மதிப்பில் தனி பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கும் மோடி அடிக்கல் நாட்டினார். நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 கட்டமைப்பு செயல் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: 'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.