இதுகுறித்து அரசு தேர்வுத் துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 11 ,12-ஆம் வகுப்பு பொது தேர்வு மாற்றப்பட்ட புதிய வினாத்தாள்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அதை பதிவிறக்கம் செய்து அளிக்க வேண்டும். மேலும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய வினாத்தாள்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சிப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு தேர்வுத் துறை இணையதளத்திலிருந்து வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஜெராக்ஸ் எடுத்து வழங்க வேண்டும் என சுற்றறிக்கை கூறப்பட்டுள்ளது.