ETV Bharat / state

வெப்பச்சலனம்: இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு - இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு பெய்யும்

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain
rain
author img

By

Published : May 22, 2021, 2:57 PM IST

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை இன்று (மே.22) பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல் நீலகிரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

  • மே 23ஆம் தேதி கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • மே 24ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்
  • மே 25ஆம் தேதி கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 9, வளவனூர் (விழுப்புரம்) 6, மஹாபலிபுரம் (செங்கல்பட்டு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 5, சித்தார் (கன்னியாகுமாரி), பூந்தமல்லி ( திருவள்ளூர்), கடலூர் (கடலூர்), சாத்தனுர் அணைக்கட்டு (திருவண்ணாமலை), கோத்தகிரி (நீலகிரி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) தலா 4 வந்தவாசி (திருவண்ணாமலை), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), திருப்போரூர் ( செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வேங்கூர் (கள்ளக்குறிச்சி), கலவை (ராணிப்பேட்டை) தலா 3.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

மே 23ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாவதன் காரணமாக, தமிழ்நாட்டின் பகுதிகளில் தரைக்காற்று மேற்கு வட மேற்கு திசையிலிருந்து வீச வாய்ப்பிருக்கிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மே 22,23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மே 24ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 25ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 26ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார்வளைகுடா தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு வங்கக் கடல், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் மேற்கு பருவமழை மேலும் தெற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் சிறிது தொலைவு முன்னேறியும் மற்றும் அந்தமான் தீவுகளில் முழுமையாகவும் முன்னேறியுள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வரும் மே 22ஆம் தேதி அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வரும் 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா - மேற்குவங்க கரையை வரும் 26 ஆம் தேதி கடக்ககூடும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.