ETV Bharat / state

'காரை எடுத்துக் கொள்ளுங்கள்.. கமலாலயம் சென்று விடாதீர்கள்..!' : ஈபிஎஸ்ஸை கலாய்த்த உதயநிதி - சட்டப்பேரவை

சட்டப்பேரவையில் இன்று பேசிய சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்ஸை நக்கலடித்துப் பேசினார்.

’என் காரில் தாராளமாக நீங்கள் ஏறளாம்; ஆனால் அதில் கமலாலயம் சென்று விட வேண்டாம்..!’ : இபிஎஸ்-ஐ கலாய்த்த உதயநிதி

author img

By

Published : Apr 21, 2022, 6:17 PM IST

Updated : Apr 21, 2022, 8:17 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் கை தட்டலுடன் உரையைத்தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், 'இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயரெடுத்து, 'திராவிட மாடல்' ஆட்சியை அமைத்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.

என் காரில் தாராளமாக ஏறலாம்! ஆனால்... : கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். இப்போது பேசுகையில் அவையில் இருப்பதற்கு நன்றி. அப்படி வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில் தான் தவறுதலாக ஏறுகிறீர்கள். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்துச் செல்லலாம்; ஆனால் கமலாலயம் சென்றுவிட வேண்டாம்' என நக்கலடித்தார்.

குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், 'எங்கள் கார் எப்போதும் எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கியே செல்லும்' என்று கூறினார். பின்னர் பேச்சைத் தொடர்ந்த உதயநிதி, 'நானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உங்கள் காரில் தவறுதலாக ஏறிச்செல்ல பார்த்தேன். கேள்வி நேரத்தில் நான் தொல்லை செய்வது இல்லை. எனவே, கூடுதலாக 5 நிமிடங்கள் பேச சபாநாயகர் நேரம் ஒதுக்க வேண்டும்.

அரசரானாலும் சரி ஆண்டியானாலும் சரி..!: அரசுத்துறைகள் குறித்து ஓரளவு சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தேன். என் தொகுதியில் தெரு, தெருவாக வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம். ஆற்காடு இளவரசர் இல்லமாக இருந்தாலும் சரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பாக இருந்தாலும் சரி..., அங்கெல்லாம் சென்று மக்களின் கோரிக்கைகளைக் கேட்டோம்.

பயிற்சிப் பட்டறையாகவே சட்டப்பேரவை தொகுதிப்பணிகளைப்பார்க்கிறேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பியதே, திமுக ஆட்சி அமைத்ததற்கு முக்கியக்காரணம். மக்கள் மனுவுடன் என்னைத் துரத்த, தீர்வை நோக்கி நான் துறை அமைச்சர்களை துரத்த, இதன் காரணமாகவே அரசுத் துறைகளை நெருங்கிச் செல்லும் வாய்ப்பை பெற்றேன்' என்றார்.

இதையும் படிங்க: அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்

Last Updated : Apr 21, 2022, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.