சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் இன்று (ஆக.13) தாக்கல் செய்யப்பட்டது. இதில் மக்களுக்கான பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட சாமானிய மக்களின் வாழ்வை உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நீர்பாசன துறையில் 10 ஆண்டுகளில், 100 கதவுகள், தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பருவநிலை மாற்றத்திற்கான புதிதாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கியதும் வரவேற்கத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிதிநிலை அறிக்கையை, மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை