ETV Bharat / state

கண்காணிப்பு கேமரா டெண்டர் ரூ.900 கோடியாக அதிகரித்தது எப்படி?- ஸ்டாலின் - transport department tender

சென்னை: “அதிவிரைவு வாகனங்களின் எண்களைக் கண்காணிக்கும் கேமரா அமைக்கும் டெண்டரை” மக்களின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக ரத்துசெய்து விட்டு, புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin's statement Government Transport Department tender

author img

By

Published : Nov 19, 2020, 8:07 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், “அதிவிரைவாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்கும் கேமரா” அமைப்பதற்கு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்ட டெண்டர் அறிவிப்பு, பத்து முறைக்கு மேல் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், இந்தக் கண்காணிப்புக் கேமராக்களை அமைக்க, 28.8.2019 அன்று டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரைத் திறப்பதற்கு முந்தையக் கூட்டத்தில் (Pre Bid Meeting), பல்வேறு திருத்தங்களைச் செய்து - டெண்டர் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாகத் திருத்தப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் முறைகேடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் அமைந்துள்ளன. 25 கோடி ரூபாயாக இருந்த டெண்டர் மதிப்பு, இந்தத் திருத்தங்கள் மூலம் 900 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது மக்களின் உயிர்ப் பாதுகாப்புடன் தொடர்புடையது. மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, டெண்டரில் பணம் கொள்ளையடிக்கும் தீய செயலில் அமைச்சர்களோ, அலுவலர்களோ ஈடுபடக் கூடாது. அதிமுக ஆட்சியில் டெண்டர் நிபந்தனைகளை திடீர் திடீரென மாற்றுவது; ஆன்லைன் டெண்டர் என்று மோசடி செய்வது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

மழை பெய்தால் ஒழுகும் பேருந்துகள், புதிதாக வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் பயணிகள் இறங்கித் தள்ளி விட வேண்டிய நிலையில் உள்ள பேருந்துகள் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, சீரழிவின் உச்சத்தில் நிற்கிறது. இதனால் மழைக் காலங்களில் அதிக விபத்துக்கள் நடைபெற்று, அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளுக்கு வித்திடுகிறது. டெண்டர் ஊழல்கள் போக்குவரத்துத் துறையை ஆட்டிப் படைக்கிறது.

2016 முதல் 2020 வரை, கடந்த நான்கு ஆண்டுகளில் 6 அரசு செயலாளர்கள் போக்குவரத்துத் துறையில் மாற்றப்பட்டுள்ளனர். ஊழல் முறைகேடுகளுக்காக, இப்படி அரசுத் துறைச் செயலாளர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர், மக்களின் உயிரைப் பகடைக்காயாக்கிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே, பத்து முறை தள்ளி வைக்கப்பட்ட “அதிவிரைவு வாகனங்களின் எண்களைக் கண்காணிக்கும் கேமரா அமைக்கும் டெண்டரை” மக்களின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக ரத்து செய்து விட்டு, புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும்; தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த டெண்டர் விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.