அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்நாளில் என் சக இந்தியர்களோடு இணைந்து, 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களைப் போற்றுகிறேன். அகிம்சை, இரக்கத்தைப் கற்பித்த அண்ணல் காந்தியடிகள், கருத்து வேறுபாடு, துன்ப துயரங்களின் போது, மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல், முன்னெப்போதையும் விட, அண்ணலையும் - இந்தியா குறித்த அவர்களின் எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்திட வேண்டும் என்றும், என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்! எனவும் தனது வாழ்த்து செய்தியில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் பிறந்தநாள்: சென்னையில் சைக்கிள் பேரணி