ETV Bharat / state

#TNPSCscam :  மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு! - #TNPCSScam goes viral

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடுகளை மூடி மறைத்து, ஆளுங்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி செய்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகியுள்ளது.

MK Stalin tweet #TNPSCScam goes viral
#TNPCSScam :  மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!
author img

By

Published : Feb 7, 2020, 11:13 PM IST

Updated : Feb 8, 2020, 11:56 AM IST

இதுகுறித்த ட்விட்டர் பதிவில் டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன்று முறைகேடு தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் இணைத்திருந்தார்.

MK Stalin tweet #TNPSCScam goes viral
#TNPSCscam : மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு

அதில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. இதனைப் பார்த்து வெட்கி தலைகுனிய வேண்டிய தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் சிறிதும் நாணமின்றி 'தமிழ்நாடு அரசு நியாயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என்ற மாயமானதும், பொய்யானதுமான தோற்றத்தை உருவாக்கிட அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு ஆகும். இந்த ஊழலை அப்படியே மறைக்க அரசு ஆலாய் பறக்கிறது. ஆளுங்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியக் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விசாரணை அலுவலர் செங்குட்டுவன், நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையை சுட்டிக்காட்டியிருக்கும் ஸ்டாலின் '' மனித நேயம் மற்றும் அப்போலோ பயிற்சி மையத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வரும் சாம் ராஜேஸ்வரன் என்பவர் தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பல முறைகேடுகள் செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, “மனிதநேயம், அப்போலோ ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு, விசாரணை செல்வதை விரும்பாத அரசின் மேலிடம், இதுவரை விசாரணை செய்த செங்குட்டுவன், சுந்தரவதனன், சுப்பிரமணிய ராஜூ ஆகிய மூன்று விசாரணை அலுவலர்களை மாற்றி, மூன்று நீதிபதிகள் மாறும் வரை காத்திருந்து, தமிழ்நாடு அரசு செய்த தில்லுமுல்லான காரியங்கள் அனைத்தும், ஆளும்கட்சிக்கு சார்பான ஒரு சில நபர்களைக் காப்பாற்றுவதற்குத்தான் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

MK Stalin tweet #TNPSCScam goes viral
#TNPSCscam வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!

யாரோ ஒரு மாணவர், இம்மாதிரியான முறைகேட்டில் இறங்க முயற்சித்ததாகவும், அதில் தோல்வி அடைந்த காரணத்தால், விரக்தியால் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு விடைத்தாளைத் தயாரித்து அனுப்பியதாகவும் சொல்லி, இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

குரூப் 1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2017ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரச்னையில் தொடர்புடைய மனிதநேயம், அப்போலோ நிறுவனங்கள், விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான்' என்று உலக மகா யோக்கியர் போல பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா ? என்ற கேள்வியை அமைச்சர் ஜெயக்குமாரை மட்டுமே குறிவைத்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளதன் பின்னணி என்னவென்று பல தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

Last Updated : Feb 8, 2020, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.