சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் 75ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "சமூகப் போராளி - அரசியல் ஆளுமை - இணையற்ற பெரும்தலைவர் இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் இன்று. அவர் நினைவு போற்றிட மணிமண்டபம் அமைத்து- அஞ்சல் தலை வெளியிட முயற்சி எடுத்தது திமுக அரசே!. ஒடுக்கப்பட்டோர் உயர்வுக்கு இறுதிவரை போராடிய சமூக வழக்கறிஞரான இரட்டைமலையாரின் நினைவைப் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
சமூக நீதி போராளி இரட்டைமலை சீனிவாசனின் நினைவைப் போற்றுவோம் - மு.க.ஸ்டாலின்
சென்னை : ஒடுக்கப்பட்டோர் உயர்வுக்கு இறுதிவரை போராடிய சமூக வழக்கறிஞரான இரட்டைமலை சீனிவாசனின் நினைவைப் போற்றுவோம் என திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.