ETV Bharat / state

’சம்மட்டி அடி எங்களுக்கு இல்லை, அதிமுகவிற்கு மரண அடி’ - ஸ்டாலின் பதிலடி!

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அதிமுகவிற்கு மரண அடி கொடுத்ததாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk-stalin
mk-stalin
author img

By

Published : Dec 11, 2019, 10:56 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உணர்ந்து முறையாகத் தேர்தல் நடத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று சி.வி. சண்முகம் தெரிவித்த கருத்துக்கு, ”அதிமுக ஒன்பது மாவட்டங்கள் சரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது எனக் கூறிவந்த நிலையில் அப்படி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி, ஒன்பது மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது எனக் கூறியது அவர்களுக்கு கிடைத்த மரண அடி” என்றார்.

மேலும், “மக்களை சந்திக்க திமுக என்றும் ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எங்கும் திமுக கோரிக்கை வைக்கவில்லை. மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்

குடியுரிமை சட்ட மசோதாவில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு அதை கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். அதிமுக குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்ததின் மூலம் கொலைகாரன், கொள்ளைக்காரன் ஆட்சியாக இருந்த எடப்பாடி ஆட்சி, தற்போது தமிழர்களுக்கு துரோகம் செய்து, துரோக ஆட்சியாகியுள்ளது” எனக் கடுமையாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ’உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தக்கோரி திமுக ஐநாவிற்குச் செல்லாமல் இருந்தால் சரி’ - ஜெயக்குமார் கிண்டல்!

Intro:Body:திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்னும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பற்றி முறையாக வெளிவரவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் இணைந்து 2011 மக்கள் கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து வழக்கு தொடர்ந்தோம், அதனையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இன்று பல அறிவிப்புகளுடன் 2011 மக்கள் கணக்கெடுப்பு படிதான் இடஒதுக்கீடு வெளியிட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போதாவது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் தீர்ப்பை உணர்ந்து முறையாக தேர்தல் நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அரசியல் கோணத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் சம்மட்டி அடி என அமைச்சர் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கையில், முன்னர் அதிமுக ஒன்பது மாவட்டங்கள் சரியாக வரையரை செய்யப்பட்டுள்ளது என கூறி வந்த நிலையில் அப்படி இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறி ஒன்பது மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என கூறியது அவர்களுக்கு கிடைத்த மரண அடி என தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயகுமார் கருத்தை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், மக்களை சந்திக்க திமுக என்றும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என எங்கும் திமுக கோரிக்கை வைக்கவில்லை என தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட மசோதாவில் திமுக மக்களை குழு தலைவர் டி.ஆர்.பாலு அதை கடுமையாக எதிர்த்து பேசியுள்ளார். மேலும் எம்.பி தயாநிதி மாறன் அதை பற்றி தெளிவாக கருத்துகளை கூறியுள்ளார். தற்போது அதிமுக குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்ததின் மூலம் கொலைகாரன், கொள்ளைகாரன் ஆட்சியாக இருந்த எடப்பாடி ஆட்சி தற்போது தமிழர்களுக்கு துரோகம் செய்து துரோக ஆட்சியாகியுள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக எந்த ஒரு தேர்தல் அறிக்கையும் சரி, சட்ட மன்றத்தில் 110 விதியின் கீழ் கூறுவதும் சரி எதுவும் காப்பாற்றப்படுவதில்லை. மத்தியின் பிஜேபி எடுப்புடி ஆட்சியாக தான் உள்ளது என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.