இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுக்காமல் அதிமுக அரசு நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்.
’சிறப்புப் பொருளாதார உதவித் திட்டம்’ என்று அறிவித்து, தனியார்மயத்திற்கு சிவப்புக் கம்பளத்தை அனைத்துத் துறைகளிலும் விரிக்க முயன்றிருக்கும் மத்திய அரசு, ’எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்’ என்ற வஞ்சக நோக்குடன், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை, தங்களுடைய அஜெண்டாவுக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஏற்றுக்கொள்ள முடியாது.
கரோனா பேரிடரை முன்னிட்டு மாநில அரசுகள் அதிக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதியளித்த கையோடு, அந்தக் கடனைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது மத்திய, மாநில உறவுகளுக்கு கிஞ்சித்தும் பொருத்தமானது அல்ல. இது விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற, கருணையற்ற பேரிடர் தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி!