தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " 95 வயதுவரை இந்த இனத்திற்காக நாட்டிற்காகப் போராடியவர் பெரியார்.
அவர் நடத்திய போராட்டங்களை யாரும் காப்பி அடிக்க முடியாது. தமிழருக்கு எதிரான அனைத்தையும் தனக்கு எதிரானதாக கருதினார்.
சாதி ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் அவருடைய இலக்கு. சாதியால் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட சமூகத்தை மேம்படுத்தினார். நாடாளுமன்ற வாசலுக்கு செல்லாத அவரால்தான் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இந்த விதை தந்தை பெரியார் போட்ட விதை.
இனி சமூக நீதி நாள்
பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான செப்.17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17ஆம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பாஜக தலைவர் அண்ணாமலை 'காமெடி பீஸ்' - மாணிக்கம் தாகூர் விமர்சனம்