ETV Bharat / state

'போர்க்கால அடிப்படையில் செயல்படுங்கள்... ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடியுங்கள்' - ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரைப் பாதுகாக்க அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளவும், மக்கள் ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

mk stalin requests government to take appropriate action on forefront corona warriors and healthcare workers

author img

By

Published : Apr 20, 2020, 12:49 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்றுக்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழந்திருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது.

சென்னையை அடுத்த வானகரத்திலுள்ள தனியார் மருத்துமவனையில் கோவிட்-19 வைரஸ் பாசிட்டிவ்வால் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவரின் குடும்பத்தாருக்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ஊரடங்கு காவல் பணியில் இரவுபகல் பாராது எந்நேரமும் ஈடுபட்டுள்ள காவல் துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மூன்று நாள்களில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஒழிந்துவிடும் என்று முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று வர்க்க பேத ஆரூடம் கணித்து அறிவித்திருந்த நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய சூழலில் மருத்துவரின் உயிரிழப்பு என்பது, வைரஸ் பரவலைத் தடுப்பதில் அதிமுக அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் மிகவும் வலியுறுத்துகிறது. விரைவு பரிசோதனைக் கருவிகள் வாயிலாக உரிய முறையிலும், மிகப் பரவலாகவும் சோதனைகள் நடத்தி தொற்றின் அளவை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

பொதுமக்களையும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான கடமையை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கரோனா பரிசோதனைக் கருவிகள் விலை என்ன? வெளிப்படைத்தன்மை வேண்டும்’ - ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.