இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்னும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாகப் பதிவு கொடுத்தேன்.
அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.
இதையும் படிங்க: 'நில அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்
நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நான் தயாராக இருக்கிறேன்.
-
இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
4/4
">இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 19, 2019
4/4இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 19, 2019
4/4
இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்" என திமுக தலைவர் மீண்டும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சவால் விடுத்துள்ளார். இதன்மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: 'முரசொலி நிலம் பஞ்சமி நிலமல்ல' - ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!