ETV Bharat / state

’காவிரி காப்பாளர்’ பட்டம் சூட்டிக்கொண்டு கொள்முதல் நிலையங்களை கண்டுகொள்ளாத முதலமைச்சர் - ஸ்டாலின் தாக்கு - பயிர்தான் விவசாயிகளின் உயிர்

விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து நாசமாகி வரும் நிலையில், ”காவிரி காப்பாளர் என்ற பட்டம் மட்டும் போதுமா?” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Cauvery Guardian enough? Mr.CM ? Don't you know that crop is lifeblood of farmers?  Immediate action required! - MK Stalin

author img

By

Published : Oct 20, 2020, 2:08 PM IST

சென்னை : டெல்டா மாவட்டங்களில் விளைந்த நெற்பயிர்கள் பலவும் கொள்முதல் செய்யப்படாமலும், பெய்யும் கனமழையில் அவை அனைத்தும் நனைந்து நாசமாகியும் வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களும் விவசாயிகளின் உழைப்பும் வீணாகியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, அங்கேயே முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நெல் பயிர்கள் விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை.

ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்களும் ஓயவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டம் மட்டும் போதுமா? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது அவருக்குத் தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் உடனடி நடவடிக்கை தேவை எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.