சென்னை: போதைப்பொருள் பயன்படுத்துவது உடல், மனநலத்திற்கு கேடு விளைவிக்குமென பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனைத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.3) ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சர் அதிரடி உத்தரவு: சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு மாணவர்களை மீட்பது, போதைப்பொருளை அடியோடு தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபேற்றது. அதில், 'போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தவறுகள் செய்தால் சொத்துகள் முடக்கம்: குறிப்பாக, 'இளைய சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், போதைப்பொருட்களை விற்பனை செய்வோரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் சொத்துகளை முடக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தரரெட்டி, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், மருத்துவத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு, தமிழ்நாடு காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின், உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லைக்கு திமுக அரசு துணை போகிறதா? - ஓபிஎஸ் காட்டம்