ETV Bharat / state

சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் பங்கேற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

World Investors Conference 2024 in Chennai: 2024, ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக, உலகிலுள்ள பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர இருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 4:50 PM IST

சென்னை: சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றனர் எனவும், பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேப்பிட்டாலாண்ட் டைடல் பார்க் திறப்பு விழா: சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் (CapitaLand) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை இன்று (அக்.31) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 'இது தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி. இதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது. 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிவதற்கான உலகத்தரமான அலுவலக இடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக, இன்றைக்கு 1.3 மில்லியன் சதுர அடியில் பூங்கா தயார் நிலையில் உள்ளது. 2வது கட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் துவக்கி இருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் 2ஆம் கட்டத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்யும். கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்றபோது, அங்கே கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் எங்களால் மறக்க முடியாதது. அப்போது, இந்நிறுவனத்தின் C.E.O.சஞ்சீவ் தாஸ் குப்தாவை சந்தித்து, அவர்கள் நிறுவனம் பல முதலீட்டு திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்ளுவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன்படியே, இந்நிறுவனத்தின் திறப்பு விழா மகிழ்ச்சி தருகிறது. "தட்டுங்கள் திறக்கப்படும்" என்பதை போலவே, நடந்திருக்கிறது.

9 புதிய டைடல் பார்க்குகள்: எங்கள் ஆட்சியின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் தாங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். தொழில்துறையில் முதல் மாநிலமாக திகழ்வது என உயரிய நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2ஆம் மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களிலும் 9 புதிய டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது. முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்துக்கொண்டு வருகிறோம். வளர்ந்து வருகின்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில், துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.

உலகளவில் அதிவேகமாக வளரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப எடுத்த இம்முயற்சியில், இத்துறையில் முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில்தான் "தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022" கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு பின்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும்மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களின் எண்ணிக்கை 30-க்கும் மேற்பட்ட GCC-க்கள் தங்களுடைய புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியுள்ளனர்.

'1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம்' - தமிழ்நாடு: யு.பி.எஸ், வால்மார்ட் (Walmart) மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி (Hitachi Energy Ltd) போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய GCC மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவியது. இப்படி, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்குவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தை பார்க்கும்போது, 2030 ஆம் ஆண்டிற்குள் '1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம்' என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுடன் புத்தாக்க மையங்கள்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் சிஸ்டம் (Dassault System), ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ் (Siemens), அமெரிக்க நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள் (Centres of excellence) மற்றும் தொழில் புத்தாக்க மையங்களை (Start-Ups) தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது.

திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் இருக்கும் சிப்காட் தொழிற் பூங்காக்களில், உலகத்தரமான தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, ஒரு துடிப்பான தகவல் தொழில்நுட்ப சூழலமைப்புடன் வளர்ச்சிக்குத் திறன் இடைவெளி ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்றுதான்; என்னுடைய கனவுத்திட்டமான, 'நான் முதல்வன்' திட்டத்தை முழு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். உயர்கல்வி கற்பிக்கின்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்கள் துறையில் முதன்மையானவர்களாக திகழ செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்.

'உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024': இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த சீரிய முயற்சிகளால்தான் தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதைக் கண் கூடாகப் பார்க்கின்றோம். இதற்கெல்லாம் மணிமகுடமாக, 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024' வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடத்த உள்ளோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர உள்ளனர். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "குஜராத் முதலமைச்சராக மாநில உரிமை குறித்து பேச்சு.. பிரதமரானதும் மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு" - ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.