ETV Bharat / state

இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி: தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - chennai latest news

முகாம்களுக்கு வெளியே வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Sri Lankan Tamil families Corona Relief Fund MK Stalin  Sri Lankan Tamil families  Corona Relief Fund  MK Stalin  cm stalin  இலங்கை  இலங்கைத் தமிழர்  நிவாரண நிதி  முதலமைச்சர்  ஸ்டாலின்  MK Stalin distributed Corona Relief Fund for Sri Lankan Tamil families  இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  தலைமைச் செயலகம்
இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி திட்டம்...
author img

By

Published : Jun 20, 2021, 11:20 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

Sri Lankan Tamil families Corona Relief Fund MK Stalin  Sri Lankan Tamil families  Corona Relief Fund  MK Stalin  cm stalin  இலங்கை  இலங்கைத் தமிழர்  நிவாரண நிதி  முதலமைச்சர்  ஸ்டாலின்  MK Stalin distributed Corona Relief Fund for Sri Lankan Tamil families  இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  தலைமைச் செயலகம்
4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி தொடக்கம்

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பலர், பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றனர். அவர்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

கரோனா பெருந்தொற்று காரணமாக, இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததை அறிந்து, அவர்களின் நலனைக் காத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக முகாம்களுக்கு வெளியே வாழும் 13 ஆயிரத்து 553 இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் மொத்தம் ஐந்து கோடியே 42 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட அரசாணை வெளியிட்டார்.

அதன்படி, நேற்று (ஜூன்.19) தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13 ஆயிரத்து 553 இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, ஐந்து இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

ஐந்து இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிகழ்வின் போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி.ஜகந்நாதன், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரக இயக்குநர் ஜெஸிந்தா லாசரஸ், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: நாடோடிய நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.