ETV Bharat / state

'திமுக குடும்பத்துக்கு பேரிழப்பு' - முன்னாள் மாவட்டச் செயலாளர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்! - திமுக மாவட்ட செயலாளர்

சென்னை: திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீத்தாபதி மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்
author img

By

Published : May 21, 2019, 7:34 PM IST

திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீத்தாபதி உடல் நலக்குறைவால், இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், ஆர்.டி. சீத்தாபதி மறைவுக்கு மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

கழகத்தின் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளருமான ஆர்.டி. சீத்தாபதி மறைவுச் செய்தி, என் இதயத்தில் வேதனைத் தீயை மூட்டியிருக்கிறது. கழகக் கொள்கை குன்றாக, தியாகத்தின் மறு உருவமாக, உழைப்பில் ஓய்வறியா தேனீயாக கழகப் பணியாற்றியவரை இன்றைக்கு இழந்து தவிக்கிறேன். அவரது உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர்களான என்.வி. நடராசன், கோவிந்தசாமி, கண்ணபிரான், மணிவண்ணன், கோ. செங்குட்டுவன், இளம்பரிதி, நீலநாராயணன் ஆகியோரைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆர்.டி. சீத்தாபதி.1974ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று கழக வளர்ச்சிக்கு அரணாக விளங்கியவர்.

எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று கழகக் கூட்டங்களை, பேரணிகளை, தலைமைக் கழகம் அறிவிக்கும் போராட்டங்களை நடத்தி கழக வளர்ச்சியில் சென்னையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு ஆகியோருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தி, சென்னை மத்திய சிறையிலும், பாளையங்கோட்டைச் சிறையிலும் ஓராண்டு காலம் மிசா சிறைவாசம் அனுபவித்தவர்.

2012ஆம் ஆண்டு கலைஞர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட ஆர்.டி. சீத்தாபதி மறைவு, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பேரிழப்பு, என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர்  R.D.சித்தாபதி உடல் நலக்குறைவால் சூலையில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.      

 இது தொடர்பாக திமுக தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்   

கழகத்தின் சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளருமான திரு ஆர்.டி.சீத்தாபதி அவர்களின் மறைவுச் செய்தி - என் இதயத்தில் வேதனைத் தீயை மூட்டியிருக்கிறது.

கழக கொள்கை குன்றாக, தியாகத்தின் மறு உருவமாக, உழைப்பில் ஓய்வறியா தேனீயாக கழகப் பணியாற்றியவரை இன்றைக்கு இழந்து தவிக்கிறேன். அவரது உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர்களான என்.வி.நடராசன், கோவிந்தசாமி, கண்ணபிரான், மணிவண்ணன், கோ.செங்குட்டுவன், இளம்பரிதி, நீலநாராயணன் ஆகியோரைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆர்.டி.சீத்தாபதி அவர்கள்.

1974ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கழக வளர்ச்சிக்கு அரணாக விளங்கியவர்.

எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று- கழக கூட்டங்களை, பேரணிகளை- தலைமைக் கழகம் அறிவிக்கும் போராட்டங்களை நடத்தி - கழக வளர்ச்சியில் சென்னையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர்.

இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திரபிரசாத், பிரதமர் நேரு ஆகியோருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் - நடத்திய  சென்னை மத்திய சிறையிலும் – பாளையங்கோட்டைச் சிறையிலுமாக ஓராண்டு காலம் மிசா சிறைவாசம் அனுபவித்தவர்.

தலைவர் கலைஞர் அவர்களின் பெயரிலான 2012 ஆம் ஆண்டு கலைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட திரு ஆர்.டி.சீத்தாபதி அவர்களின் மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பேரிழப்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.