முன்னாள் பிரதமர், பொருளதார வல்லுநர் என பன்முகத்தன்மை கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங் இன்று தனது 87ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில்,
"நாடாளுமன்றத்திலும், அரசியலிலும் டாக்டர் சிங்கின் தலைமையிலிருந்து நமது நாடு தொடர்ந்து பயனடைந்து வருகிறது.
நாட்டிற்கும், மக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் மன்மோகன் சிங் சேவையாற்ற விரும்புகிறேன்."
என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: மோடி வாழ்த்து