ETV Bharat / state

காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர்வரையில் 100 பேருக்கு அண்ணா பதக்கம்

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 'அண்ணா பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

medals for 100 police  mk stalin announced anna medal  anna medal  anna medal for 100 police  100 பேருக்கு அண்ணா விருது  அண்ணா விருது  அண்ணா பதக்கம்  100 பேருக்கு அண்ணா பதக்கம்  அண்ணா பதக்கம் பெற உள்ள 100 பேர்  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்
அண்ணா பதக்கம்
author img

By

Published : Sep 15, 2021, 6:49 AM IST

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர், ஊர்காவல் படை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் 100 தமிழ்நாடு காவல் துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று (செப். 14) வெளியிட்டார்.

பதக்கம் பெருவோரின் விவரங்கள்

அதில், “இந்த ஆண்டு, காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக் காவலர் முதல் சிறைக் கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் உதவி படை தளபதி முதல் வட்டாரத் தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் 'தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்' வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சுழற்சி முறையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.