ETV Bharat / state

’மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தடைபட்டதே மின்வெட்டிற்கு காரணம்’ - செந்தில் பாலாஜி - மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜி

மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் ஒரே நாளில் 796 மெகாவாட் அளவுக்கு திடீரென தடைபட்டதால் மின் தடை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

’மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் தடை ஏற்பட்டதே தொடரும் மின்வெட்டிற்கு காரணம்’ - செந்தில் பாலாஜி

author img

By

Published : Apr 23, 2022, 11:28 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் (ஏப்.22)நடைபெற்றது.

எதிர்கட்சித் தலைவர் தீர்மானம்: கேள்வி நேரத்திற்குப் பிறகு நேரம் இல்லா நேரத்தில் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய , ”கோடைகாலத்தின் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். நிலக்கரி கையிருப்பில் உள்ளது என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். நிலக்கரி பற்றாக்குறையால் மின் தடை என செய்தி வந்துகொண்டிருக்கிறது.

சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு முறையாக மின்சாரத்தைப் பெறவில்லை. மே மாதம் தான் காற்றாலை மின்சாரம் கிடைக்கும். அனல்மின் நிலையங்களில் நிலக்கரி போதிய இருப்பு இல்லை. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். தொழிற்சாலைகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ”ஒரே கூட்டத் தொடரில் ஒரே பிரச்சனை குறித்து 2 தடவை கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்து கொள்வதில்லை. இருப்பினும் எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி கேட்டார் என்பதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் தருவார்” என தெரிவித்தார்.

மத்தியத் தொகுப்பில் மின்சாரத் தடை: அப்போது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியபோது, ”தமிழ்நாட்டின் ஒரு நாள் சராசரி மின் நுகர்வு என்பது கடந்த 18.04.2022 அன்று 317 மில்லியன் யூனிட்டாக இருந்த மின் நுகர்வு 19.04.2022 அன்று 343 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. 20.04.2022 அன்று 347 மில்லியன் யூனிட்-ஆகவும், நேற்று 367 மில்லியன் யூனிட் என மின் நுகர்வாக உயர்ந்துள்ளது. இந்த மின் நுகர்வு உயர்வுக்கு ஏற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மின்சார துறைக்கு வழங்கினார்.

அதன் படி கோடை காலத்தை எதிர்கொள்ளவும், ஏப்ரல் - மே மாதம் தேவையான மின்சாரத்தை கணக்கு செய்து ஏறத்தாழ 3,000 மெகாவாட் அளவிற்கு குறுகிய கால ஒப்பந்தம் மூலமாக குறைந்த விலையில் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அந்த மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் ஒரே நாளில் 796 மெகாவாட் அளவுக்கு திடீரென தடை ஏற்பட்டது.

குறிப்பாக நம்முடைய உற்பத்தி 2020 - 21 ஆம் ஆண்டு தமிழ்நாடு அனல்மின் நிலையம் வழியாக 15,553 மில்லியன் யூனிட்டாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில் அது 20,391 மில்லியன் யூனிட்டாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 4,837 மில்லியன் யூனிட் நமது சொந்த உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டது. நிலக்கரி பற்றாக்குறை, நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்தபோதும் கூட 1 டன் கூட நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை.

கடந்த ஆட்சியில் நடைபெறவில்லையா..?: நமக்குத் தேவையான நிலக்கரி நாளொன்றுக்கு 72,000 டன் என்ற அளவில் இருந்த போதும் கூட ஒரு நாளைக்கு 48,000 முதல் 50,000 டன் வரை அளவிலேயே நிலக்கரி வழங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக 18.04.2022 அன்று 30,317 டன், ஏப்ரல் 19 அன்று 37,285 டன், ஏப்ரல் 20 அன்று 20,257 டன், ஏப்ரல் 21 அன்று 46,000 டன் எனக் குறைவான அளவில் நிலக்கரி வழங்கும் சூழல் உள்ளது.

ஏப்ரல், மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. 4 நிறுவனங்கள் இந்த ஒப்பந்த புள்ளியில் பங்குபெற்றது. அதன் படி 137 டாலர் என்று ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இறக்குமதி நிலக்கரி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமக்கு கிடைக்க வேண்டிய மத்திய தொகுப்பு மின்சாரம் இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை. இருந்தாலும் நம் உற்பத்தி, தனியார் உற்பத்தி மூலம் மின்சாரம் தடை சரி செய்யப்பட்டுள்ளது. வெறும் 41 இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்படும் சூழல் இருந்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெறாததைப்போல இங்கு ஒரு தோற்றத்தை உருவாக்கி பேசுகின்றனர்.

மொத்தமாக 68 முறை கடந்த ஆட்சி காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மத்திய தொகுப்பில் தடை ஏற்பட்டதால் ஒரு முறை இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளித்து வருகிறோம். இன்னும் கவனித்து பார்த்தால் குஜராத், மஹாராஷ்டிராவில் நிலக்கரி பற்றாக்குறையை காரணம் காட்டி மின் தடை அறிவித்திருக்கிறார்கள். எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. போர்க்கால நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்பட்டு வருகின்றது. நம்முடைய மின் தேவையை நாமே பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கையை எடுத்துள்ளார். தொழிற்சாலைகளுக்கு எந்த சூழலிலும் மின் தடை ஏற்படாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாசனை திரவியம், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.