ETV Bharat / state

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... 19 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை... - பாலியல் தொல்லை

நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 19 வயது இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Minor girl rape case  Minor girl rape accused  sexual harassment  child abuse  குழந்தைக்கு பாலியல் தொல்லை  பாலியல் தொல்லை  குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
குழந்தைக்கு பாலியல் தொல்லை
author img

By

Published : Apr 22, 2022, 9:40 PM IST

Updated : Apr 23, 2022, 6:37 AM IST

சென்னையில் 19 வயது இளைஞர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நான்கு வயது குழந்தையை பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2020ஆம் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

அதனடிப்படையில், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது வந்தது.

இந்த வழக்கை இன்று (ஏப். 22) விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, இளைஞர் மீதான குற்றச்சாட்டுக்களை காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அபராததொகையை பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அம்மாவான 17 வயது சிறுமி... காரணம் 12 வயது சிறுவன்... ஷாக்கில் தஞ்சாவூர்!

Last Updated : Apr 23, 2022, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.