ETV Bharat / state

சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு சிறை - போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி - accused gets 20 years jail

13 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சிறை

author img

By

Published : Mar 3, 2022, 8:45 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசை வார்த்தைக் கூறி, சிறுமியைக் கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்தப்புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மகளிர் காவல்துறையினர் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, பாதிப்பை ஏற்படுத்திய இளைஞர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்குத் தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.22 லட்சம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.