ETV Bharat / state

போரூர் ஏரியில் குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - chennai district news

போரூர் ஏரியில் குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ministet supramaniyan inspection porur lake

author img

By

Published : Jul 17, 2021, 4:42 PM IST

Updated : Jul 17, 2021, 5:21 PM IST

சென்னை : குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியில், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் நிறுவன மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் எம்.எல்.ஏ.கணபதி ஆகியோர் போரூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “போரூர் ஏரியின் பரப்பளவு 252 ஏக்கர். அரை ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 200 ஏக்கர் குப்பை கொட்டும் இடமாகவும், மரம் செடிகள் வளர்ந்த இடமாகவும் மாறியுள்ளது.

கடும் நடவடிக்கை

இங்கு உள்ள மரம்,செடி,கொடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். குப்பைகள் கொட்டுவதை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

கடந்த 10 ஆண்டுகளாக ஏரி பராமரிக்கப்படாமல் இருந்தது. ஏரியில் குப்பைகளை யார் கொட்டினாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உணவுக்காக மீண்டும் ஊருக்குள் வந்த காட்டு யானை பாகுபலி

Last Updated : Jul 17, 2021, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.