சென்னை ராயபுரத்தில் சமூகநலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நலத்திட்ட விபரம் வருமாறு, 20 லட்சத்து 81 ஆயிரத்து 152 ரூபாய் மதிப்பில் 71 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி, 68 லட்சத்து 72 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் 8 கிராம் தங்க நாணயங்கள், 130 மாற்றுத் திறனாளிகளுக்கு இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள், 6 லட்சத்து 76 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பில் 131 காது கேளா மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில், அமைச்சர் ஜெயகுமார் காது கேளா மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களின் மொழியான சைகை மொழியில் உரையாடி அசத்தினார்.
இதையும் படிங்க: 52 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்