சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அடையாறு - கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.30) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, சுற்றுலா பொருட்காட்சி திடலின் பின் பகுதியில் இருந்து, மயிலாப்பூர் வரையிலான அடையாறு - கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயினை புனரமைப்பு செய்து, அகலப்படுத்தி, கரையோரத்தில் உள்ள சுற்றுப் பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை நதிகள் சீரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்வர்ணா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ‘கவுன்சிலர்களுக்கும் ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும்’