மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவ.24) காலையில் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனைக்குத் திடீரென வருகை தந்தார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' சரியான முறையில் கிடைக்கிறதா? என்பதையும் உறுதி செய்துகொண்டார்.
மேலும், பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டினை பார்வையிட்ட அவர், அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து, மருத்துவர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பாராசிட்டமால், ஸ்டீராய்டு ஊசிகளைப் போடக்கூடாது - விஜய பாஸ்கர்