தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மே 28) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரத்து 216 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 295 நபர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் இல்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு பாதிப்பு உறுதியானது. எனவே, தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் மட்டும் 106 நபர்கள் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா இறப்பு சதவீதம் 0.7 ஆக உள்ளது. உலகளாவிய அளவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளது. இதுவரை தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். கரோனா சிறப்பு வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மிகுந்த இன்னலுக்கு மத்தியில் பணிகள் செய்து வருகின்றனர். இவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... 'கரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை'