இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்பட்ட நிலங்களில் 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு, கள ஆய்வின்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவே கட்டட அனுமதி வழங்கப்படும்.
புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல்/ புதுப்பித்தல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே மக்கள் விண்ணப்பித்து உரிய தீர்வை உரிய காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து பொதுமக்களும் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் ஆகியவை எளிதாக கிடைக்கும் வகையில், நாட்டிலேயே முதல்முதலாக ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களை அலைகழித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.