தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று (அக். 1) சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களிடம் தொடர்புகொண்டு, சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் தற்போது வழங்கப்படும் குடிநீர் நிலவரம், அடைப்புகள் உள்ள குழாய்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகள், 150 எம்.எல்.டி & 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், "ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள், புதிய திட்டங்களின் நிலை, பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வுமேற்கொண்டு, பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்" என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர்!