ETV Bharat / state

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்  கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் - sports news

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேஷ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரனேஷ்
பிரனேஷ்
author img

By

Published : Jan 8, 2023, 7:27 AM IST

சென்னை: 79ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேஷ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆழ்வார் பேட்டை முகாம் அலுவலகத்தில் நேற்று (ஜனவரி 7) சந்தித்து வாழ்த்து பெற்றார். செஸ் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்து 79ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் ‌பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கிராண்ட் மாஸ்டர் பிரனேஷுக்கு, உதயநிதி பொன்னாடை அணிவித்து, செஸ் தம்பி சிலையை நினைவுப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் பிரனேஷ்

இந்த நிகழ்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் உடனிருந்தனர். சிவகங்கை மாவட்டம், கோட்டையூர், கே. அழகாபுரியைச் சேர்ந்தவர் பிரனேஷ்.

இவரது தந்தை ஆர். முனிரெத்தினம், ஜவுளி கடையில் கணக்காளராக உள்ளார். இவரது தாயார் மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் உள்ளனர். பிரனேஷ் தனது 16ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியாவின் 79ஆவது கிராண்ட் மாஸ்டர் ஆவார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழ்நாட்டை சார்ந்த 28ஆவது செஸ் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 16 வயதிற்குட்பட்ட பிரிவுகளில், சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ்-2020 (International Grand Master Chess Champion-2020) போட்டியில் தங்கம், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சன்வேய்சிட்ஜஸ்-2021 கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் (Sunwaysitges Grand Master Chest Festival-Spain-2021) வெள்ளி, இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்-2022 போட்டியில் (Common Wealth Chess Championship-Srilanka-2022) தங்கம், டெல்லியில் நடைபெற்ற 2022-ஆசிய செஸ் போட்டியில் (Asian Continental Chess Championship-New Delhi-2022) வெண்கலம், ஸ்வீடன் ரில்டன் கோப்பை-2022 (Rilton Cup-Sweden-2022) செஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் பிரனேஷ்.

இதையும் படிங்க: பொங்கல் விழாவில் கிட்டிப்புள்ளு விளையாடி மகிழ்ந்த எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.