ETV Bharat / state

"மாணவர்களுக்கு துணையாக திமுக நிற்கும்" - உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Feb 21, 2023, 5:01 PM IST

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுடன் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு துணையாக திமுக நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்.

மாணவர்களுக்கு துணையாக திமுக நிற்கும்
மாணவர்களுக்கு துணையாக திமுக நிற்கும்

சென்னை: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பயின்று வரும் 3 தமிழ் மாணவர்கள் மீது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். சிவாஜியின் படம் உடைக்கப்பட்டதற்காக ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மாணவர்களை தாக்கிய ஏபிவிபி அமைப்பினர் அங்கிருந்த கார்ல் மார்க்ஸ், லெனின், பெரியார் ஆகியோரின் படங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். தருமபுரி எம்.பி. செந்தில்குமார் காயமடைந்த மாணவர்களை பல்கலைக்கழக்த்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மாணவர்கள் பாதுகாப்பிற்கு பல்கலைக்கழகம் உறுதியளிக்க வேண்டும் என்று துணை வேந்தரிடம் எழுத்து பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், டெல்வி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பானது, தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தியைக் கண்டு தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது.

இதனைக் கேள்விப்பட்ட கழகத் தலைவர் ஸ்டாலின் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். டெல்லி காவல்துறை, இந்தக் கொடும் நடவடிக்கைகளுக்கு, கண்களை மூடிக்கொண்டு எந்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகப் பொதுவுடமை கட்சியை சார்ந்த மாணவர்களை முதலில் தாக்கிய, பாஜகவின் ஏபிவிபி அமைப்பு, இப்போது தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ஏற்கனவே, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜெஎன்யுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, குண்டர்களை வைத்து ஏபிவிபி, அமைப்பு நடத்திய கொடுந்தாக்குதலை கண்டித்தும், காயமுற்ற ஜெஎன்யு மாணவர் அமைப்பின் தலைவர்களை கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியின் சார்பில் நாங்கள் கழக நிர்வாகிகளுடன் டெல்லி, ஜெஎன்யுவிற்கு சென்று, காயமுற்ற மாணவர் சங்க தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

மேலும், ஜெஎன்யு மாணவர்களை, மாணவர் போர்வையில் வந்து தாக்கிய குண்டர்களையும், அவர்களை ஏவிவிட்ட ஏபிவிபி அமைப்பினரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எங்களது கண்டன குரலை எழுப்பினோம். அச்சம்பவத்தினால், ஜனநாயக மாண்பினை மதிக்கும் இந்திய அளவிலான அனைத்து மாணவர் அமைப்புகளும் வெகுண்டெழுந்து ஏபிவிபி அமைப்பிற்கு பெரும் கண்டனங்களை தெரிவித்ததை நாடறியும்.

  • It is painful to know that students from Tamil Nadu studying in #JNU were attacked by #ABVP political goons. They have also damaged the pictures of great leaders like Periyar & Karl Marx. This is highly condemnable. (1/3)

    — Udhay (@Udhaystalin) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தன்னுடைய கொடூர சர்வாதிகாரத்தில் கோலோச்சுகிற பாஜக ஆட்சியின் தலைமையிடமாக விளங்கும் டெல்லி தலைமையிடத்திற்கே, திமுக இளைஞர் அணியும், மாணவர் அணியும் நிர்வாகிகளுடன் சென்று காயமுற்ற மாணவர்களுக்கு ஆறுதல் சொல்லிட கண்டனத்தை பதிவு செய்தது ஏபிவிபிக்கு பெரும் எதிர்வினை தந்தது.

அண்மையில் குஜராத் கலவரம் குறித்து பிபிசி செய்தி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜெஎன்யு பல்கலைக் கழகத்தின் மாணவர்களை தடுத்து நிறுத்தி, பாஜக அரசின் ஏபிவிபி மாணவர் அமைப்பை பொதுவுடமை கட்சிகள் உட்பட திமுக மற்றும் பல்வேறு ஜனநாய முற்போக்கு அமைப்புகள் கண்டித்தது.

இந்நிலையில், ஜெஎன்யு பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மீது இனவெறி தன்மையோடு, கொலைவெறி தாக்குதலை ஏபிவிபி அமைப்பு நடத்தியுள்ளது. மேலும், சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, மதவெறி எதிர்ப்பு என்று சமூக சீர்த்திருத்தத்தை, சமத்துவத்தை ஏற்படுத்தி தந்திருக்கக்கூடிய தந்தை பெரியாரின் படத்தையும், பொதுவுடமை தலைவர்களின் உருவப்படங்களையும் உடைத்து தங்கள் மதவெறி, இனவெறி, இந்துத்துவா அரசியமை ஜெஎன்யு பல்கலைக் கழகத்தில் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது ஏபிவிபி அமைப்பு.

உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் தமிழர்களுக்கு ஒரு இடையூறு, இன்னல் ஏற்படுமாயின் அதனை கண்டித்தும், தமிழர்களுக்கு கை கொடுத்து உயர்த்தும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, கழக இளைஞர் அணியும், மாணவர் அணியும் ஒன்றிணைந்து பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு, தமிழ் மாணவர்களின் மீது நடத்தியுள்ள கொடுந்தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது.

மாணவர்கள் மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்கு விவாதிப்பதும், கருத்தியல் போர் நடத்திட வேண்டுமென்பது அரசியல் மாண்பாகும். ஆனால், வெறுப்பு அரசியலையும், வெறிகொண்ட தாக்குதலையும் தன் சித்தாந்தமாய் கொண்டிருக்கும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு குண்டர்களாய், ரவுடிகளாய் மாறி டெல்லியில் பயிலும் தமிழ் மாணவர்களை தாக்கியிருப்பதற்கு அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும்.

தமிழ் மாணவர்கள் டெல்லியில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும். திமுகழகம் என்றென்றும், தந்தை பெரியார், பேறறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்து தந்துள்ள அறவழியில் அறிவாயுதம் ஏந்தி போரிடுகிறோம். சமூகநீதி, பெண்ணுரிமை, மொழி உரிமை, சாதி மறுப்பு, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகிய கொள்கைகளை பாஜகவின் தலைமைபீட செவிப்பறை கிழியும் வரை எதிரொலித்துக்கொண்டே இருக்கும். உடைக்கப்பட்ட தந்தை பெரியாரின் உருவப்படம் அங்கு மீண்டும் புதியதாய் காட்சியளிக்கிறது!

மேலும், விரைவில், டெல்லி ஜெஎன்யு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம். டெல்லி ஜெஎன்யு பல்கலைக் கழகத்தில் பயிலும், தமிழ்நாட்டு மாணவர்களை இனவெறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மீது, பல்கலைக் கழக நிர்வாககமும், டெல்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆதரவாய் களமாட திமுக இளைஞர் அணியும், மாணவர் அணியும் என்றென்றும் துணை நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பிற்கு கண்டனங்களைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் உலகளவில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இந்த அரசியல் வன்முறை, ஜனநாகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இதை சகித்துக்கொள்ளக்கூடாது.

பல்கலைக்கழகமும் காவல்துறையும் இந்த தாக்குதலை ஊமைப் பார்வையாளர்களா பார்த்துக் கொண்டிருப்பதைக் கேட்பது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் பேசி அவர்களுடன் எங்கள் கட்சி துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏபிவிபி அமைப்பினரின் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டு மாணவர்களுடன் வீடியோ காலில் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.2,000 தான் மொத்த செலவு.. யூடியூப் மூலம் மட்டுமே பிரச்சாரம்.. ஈரோடு கிழக்கில் இப்படி ஒரு வேட்பாளரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.