ETV Bharat / state

'பொறாமைத் தீயில் வெந்துபோயிருக்கிறார் மு.க. ஸ்டாலின்...!'

சென்னை: தமிழ்நாடு ஆளுமைத் திறனில் முதலிடம் பெற்றுள்ளதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைத் தீயில் வெந்துபோயிருக்கிறார் மு.க. ஸ்டாலின் என அமைச்சர் உதயகுமார் சாடியுள்ளார்.

minister-udhayakumar
minister-udhayakumar
author img

By

Published : Dec 29, 2019, 11:29 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய மாநிலங்கள் அனைத்தோடும் ஒப்பிடுகையில் தமிழ்நாடு ஆளுமைத் திறனில் முதலிடம் பெற்று விளங்குவதாக மத்திய அரசு நடத்தியிருக்கும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனைக்கண்டு பொறாமைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 'முதலமைச்சர் மீதும், அதிமுக அரசு மீதும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியினால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்துவிடும் அதிமுக அரசு முடிந்துவிடும்' என்றார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துகொண்டு தங்கள் குடும்பத்தின் அராஜக ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று கனவுக்கோட்டை கட்டியிருந்தவர் மு.க. ஸ்டாலின், ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அதிமுக அசைக்க முடியாக இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது.

சட்ட ஒழுங்கிலும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு அரசை பாராட்டியிருக்க வேண்டாமா? அதைவிடுத்து மத்திய அரசின் ஆய்வின் முடிவையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்.

என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்படாது என மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை மு.க. ஸ்டாலின் அறிவாரா? எது நடந்தாலும், அதில் அரசியல் ஆதாயம் தேட என்ன வழி என்ற சுயநல தீய சிந்தனையிலிருந்து விடுபட்டால்தான் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தலைவர்களாக முடியும்.

அரசின் அறிக்கைகளை படிப்பதில்லை, நடுநிலையான புள்ளிவிவரங்கள், கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொள்வதில்லை. எதையும் ஒரு பொறுப்பற்ற பார்வையோடு அணுகும் மனநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இருப்பது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஸ்டாலின் போராடுவது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காகவே' - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

Intro: பொறாமைத் தீயில் வெந்து போயிருக்கிறார் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிக்கை Body:
பொறாமைத் தீயில் வெந்து போயிருக்கிறார் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிக்கை

சென்னை,

தமிழ்நாடு ஆளுமைத் திறனில் முதலிடம் பெற்றுள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைத் தீயில் வெந்துப் போயிருக்கிறார் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,          இந்திய மாநிலங்கள் அனைத்தோடும் ஒப்பிடுகையில் தமிழ்நாடு ஆளுமைத் திறனில் முதலிடம் பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அரசு நடத்தியிருக்கும் ஆய்வின் முடிவுகள் பாராட்டியிருப்பதைக் கண்டு பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் மீதும், அதிமுக அரசு மீதும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அகால மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்துவிடும், அதிமுக அரசு முடிந்து விடும், அதன் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்கள் குடும்பத்தின் அராஜக ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று கனவுக் கோட்டை கட்டியிருந்தவர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அசைக்க முடியாக இரும்புக் கோட்டையாக திகழ்கிறது. இதனை தாங்கமுடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் எளிமை, பணிவு, அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் இயல்பு, அவரது அரசியல் பயணத்தின் வெற்றிகள் ஆகியவற்றை சிறு பிள்ளைத்தனமாகவும், பொறுப்பற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெறுப்பை உமிழ்ந்து, அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே தவிர, அதிமுக அரசின் சாதனைகள் குறித்தோ, முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ எவ்விதமான அறிவுப்பூர்வமான கருத்துக்களையும் குறித்தோ இதுநாள்வரை கூறியதில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

         அனைத்து மாநிலங்களின் ஆளுமைத்திறனை பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்து, அதற்கு மதிப்பெண் வழங்கி பட்டியலிடும் மத்திய அரசு, இந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் தர வரிசையில், ஆளுமைத் திறனில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் என்று பாராட்டியிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிலும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவை பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசை பாராட்டியிருக்க வேண்டாமா ? இன்னும் சிறப்புடன் மக்கள் பணியாற்ற ஆலோசனை தந்திருக்கலாமே ! அதைவிடுத்து மத்திய அரசின் ஆய்வின் முடிவையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறாரே. இதுதான் கடந்த 70 ஆண்டுகளாக நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பங்குபெற்றிருக்கும் அவரது குடும்பம் அவருக்குக் கற்றுத் தந்த பக்குவமா ? பண்பாடா ?

         இதே தரவரிசைப்பட்டியலில் பாராட்டத்தக்க இடத்தைப் பெறாமல் தமிழ்நாடு கீழே தள்ளப்பட்டிருந்தால், அதை தூக்கி வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக முழுங்கிக்கொண்டிருப்பார் மு.க.ஸ்டாலின். “ஆறு நாளில் கலைந்து விடும்” என்று ஆசைக்கோட்டை கட்டியிருந்த ஸ்டாலின் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெறும் அரசாக இந்த அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி மனம் புழுங்கி அறிக்கை வெளியிடுவது வெட்கக்கேடானது.

         மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களால், மாநிலத்தின் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது தான் நடைமுறை. அவ்வாறு தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடியார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவும் அவர் அளித்த ஆதரவாலும் 1969ல் மு.கருணாநிதி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு கூடவா மு.க.ஸ்டாலினுக்கு மறந்து போயிற்று? 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை முன்னிலைப்படுத்தியதால் கிடைத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால்தான் இன்று மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறாரே தவிர, தனது சொந்த சொல்வாக்கால் அவர் பெறவில்லை. இந்த நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவைகூட மறந்துபோன ஸ்டாலின் குறைந்தபட்சம் தன் குடும்பத்தின் நிகழ்வுகளை நினைவில் கொள்ள முடியாமல் போகிறது என்றால், அது பொறாமைத் தீ, அவர் அறிவை எந்த அளவிற்கு பொசுக்கி உள்ளது என்பதன் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

         நாட்டில் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வேண்டும், மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் அண்ணன்-தம்பிகளாக வாழ வேண்டும், சமூக நல்லிணக்கமும், மதச்சார்பின்மையும் போற்றப்பட வேண்டும் என்பதில், அதிமுக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.
         
         சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாமல் அந்த மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற குறுகிய சிந்தனைக்குள் அடைபட்டுக்கிடக்கும் மு.க.ஸ்டான் தமிழ்நாட்டை போராட்ட களமாக்க முயற்சித்தால் அது அவருக்கு பெரும் தோல்வியாகவே முடியும்.
         தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பெற ஒருவர் 6 மாதம் வசித்தாலோ அல்லது அங்கே 6 மாதம் வசிப்பேன் என்று தெரிவித்தாலே போதும் என்று தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தெவிரிவிக்கிறது. என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்படாது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா?
         எது நடந்தாலும், அதில் அரசியல் ஆதாயம் தேட என்ன வழி என்ற சுய நல தீய சிந்தனையில் இருந்து விடுபட்டாதால்தான் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தலைவர்களாக முடியும்.          
         தொடர்ந்து முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தைக் கொண்டு வீழ்த்த முயற்சித்தால் அது பயனளிக்காது. முதலமைச்சர் அ தனது உழைப்பாலும், பணிவாலும், பண்பாலும் என்றைக்கும் ஓங்கிதான் நிற்பார். மக்கள் செல்வாக்கைப் பெறுவார்.
அரசின் அறிக்கைகளை படிப்பதில்லை, நடுநிலையான புள்ளிவிவரங்களை புரிந்து கொள்வதில், கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொள்வதில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எதையும் ஒரு பொறுப்பற்ற பார்வையோடு அணுகும் மனநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இருப்பது கண்டிக்கத்தக்கது என அதில் கூறியுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.