சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்.6 ஆம் தேதி தொடங்கியது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் நான்காவது நாளான இன்று (ஏப்.11) உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதிலுரை நிகழ்த்துகின்றனர். சட்டப்பேரவை தொடக்கியபோது கேள்வி நேரத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவர் ஜி.கே.மணி, உலகின் ஆதி இசை தமிழ் இசை, ஒவ்வொரு மாவட்டத்திற்கு இசை பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதன் மூலம் தமிழ் இசை உலகம் முழுவதும் சென்றடையும் எனப் பென்னாகரம் தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தொழிற்துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இசை பள்ளி, 4 கல்லூரிகள் மற்றும் ஒரு இசை பல்கலைக்கழகம் தற்போது உள்ளது.
மேலும், மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், தேவையை பொருத்து வரும் காலங்களில் இசை பள்ளி தொடங்கப்படும். ஆதி இசை, தமிழ் இசையாக தான் இருந்திட வேண்டும். தமிழ் இசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும்" என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சி குறித்து உலகம் முழுவதும் ஆய்வு நடக்கிறது - கி.வீரமணி