சென்னை: தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நேரத்தில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, மிக்ஜாம் புயலாக மாறியது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் கனமழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்த நிலையில், பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பல இடங்களிலும் பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்து விழுந்ததில் மின் இணைப்பு கம்பிகளும் சேதமடைந்து இருந்தன. தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில், இன்று சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் சென்னையில் ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S அண்ட் P பொன்னியம்மன் நகர்” பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
— Thangam Thenarasu (@TThenarasu) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச்…
">சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
— Thangam Thenarasu (@TThenarasu) December 5, 2023
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச்…சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
— Thangam Thenarasu (@TThenarasu) December 5, 2023
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச்…
மேலும், “சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள் மற்றும் சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், ராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி” ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லூர் - மச்சிலிப்பட்டினம் இடையே இன்று கரையைக் கடக்கிறது மிக்ஜாம் புயல்!