சென்னை: சட்டப்பேரவையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “2011ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் தொடங்கியதே 11 மருத்துவக்கல்லூரிகள்.
பணிகளில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டுமானத்திற்கு, உடனடியாக ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் ரூ.204.40 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதோடு, 4 முறை டெல்லிக்கு செல்லும் போது தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே, இந்தாண்டு 1450 மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 6,025 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, இந்தாண்டு 8,075 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையே காரணம்” எனத் தெரிவித்தார்.