சென்னை: போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேரவையில் தெரிவித்தார். 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், நம் வசம் உள்ளது. ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, மக்களுக்கான பணிகளை செய்கின்ற அதேநேரத்தில், அதில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுடைய நலனையும் காக்க வேண்டிய துறையாக இந்த துறை உள்ளது. இங்கே பேசிய தோழர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
14-வது ஊதியக் குழு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வியையும் இங்கே வைத்தார்கள். வருகின்ற 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்தில் இலவசம் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு