பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு நேற்று (மே.9) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி, அமைச்சர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக சார்பில் பெரம்பலூர் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர், சிவசங்கர். கரோனா தொற்று காரணமாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆம்புலன்ஸில் குவா குவா சத்தம்... தாய், சேயைக் காப்பாற்றிய ஊழியர்களுக்குப் பாராட்டு!