ETV Bharat / state

10 நாட்களில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி - 10 நாட்களில் தடையில்லா மின்சாரம்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
author img

By

Published : Jun 22, 2021, 5:51 PM IST

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என்றால் 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்காதது ஏன்? என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரவி, "கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சி என்றாலே மின்தடை ஆட்சி என்ற நிலைதான் உள்ளது. மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி உள்ளது" என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் கட்டணம் வசூலிப்பதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எவ்விதமாக குளறுபடியும் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மின்தடைக்கு காரணம் கடந்த 9 மாதங்களாக எவ்விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளபடவில்லை. எனவே தடையில்லா மின்சாரம் வழங்க தான் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 10 நாட்களுக்குள் மின்தடை சரிசெய்யப்படும்" என உறுதியளித்தார்.

எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "கடந்த ஒரு மாதமாக இந்த அரசு என்ன செய்தது. இந்த ஒரு மாதமாக தான் மின்தடை உள்ளது. அதிமுக ஆட்சியில் மின் தடை இல்லை" என்றார்.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என்று சொல்லிகொள்கிறார்கள். ஆனால் 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருப்பதாக மக்கள் கூறியிருந்தனர். அதற்காக மூன்று வகையாக மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் 5 லட்சத்து 40 ஆயிரம் முறை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ் பார்மர் கோளாறின் காரணமாக 10 ஆயிரம் முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக அரசு ஆட்சியின் காரணமாக, மின் வாரியத்திற்கு 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கு வருடத்திற்கு 13 விழுக்காடு என 13 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்தியுள்ளனர். திமுக பொறுப்பேற்றதும் வட்டி செலுத்துவதில் 2 ஆயிரம் கோடி சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. வட்டியை 7 விழுக்காடு என குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின் பராமரிப்பு செய்யப்படாததால் மின் வெட்டு ஏற்பட்டுகிறது.
அதுவும் வரும் 10 நாட்களுக்குள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும்.

ஒரு யூனிட் 7 ரூபாய் என வருடத்திற்கு 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திடம் அதிமுக அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது. இது சீர்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்" என்றார்.

கடைசியாக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கமணி பேசுகையில், "ஏதாவது ஒரு இடத்தில் மின்தடை ஏற்பட்டால் பராவாயில்லை. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படுகிறது"என்றார்.

காரசார விவாதம் தொடர்ந்ததால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறுக்கீடு செய்து, இதோடு இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுச் சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிக்க கூடாது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.