ETV Bharat / state

சென்னையில் நிலத்திற்குள் மின்சார வயர்கள் புதைக்க நடவடிக்கை

சென்னையில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலத்திற்குள் மின்சார வயர்களைப் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அனைத்து இடங்களிலும் நிலத்திற்குள் மின்சார ஒயர்கள்

author img

By

Published : Sep 6, 2021, 3:56 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், ஜி.கே. மணி ஆகியோர் சோழிங்கநல்லூர் தொகுதியில் துணைமின் நிலையமும், பென்னாகரம் தொகுதியில் உபகோட்டத்தைக் கோட்டமாகவும் தரம் உயர்த்த அரசு முன்வருமா எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்துப் துறையின் அமைச்சர் அமைச்சர் செந்தில்பாலாஜி, "சோழிங்கநல்லூர் தொகுதியில் 2018ஆம் ஆண்டுமுதல் துணைமின் நிலையம் அமைக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முன்னுரிமை அடிப்படையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணைமின் நிலையம அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில்பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் 176 கோட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி
முதலமைச்சருடன் செந்தில்பாலாஜி

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு எட்டாயிரத்து 905 மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலத்திற்குள் மின்சார வயர்களைப் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.